முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி உஷா மரணத்திற்கு காரணம் எது? நீதிபதியின் கிருபாகரன் விளக்கம்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : காவலர்கள் தற்கொலை, பணியில் இருந்து இடைநிற்றல் ஆகியவற்றிற்கு பணியிட அழுத்தமே காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பணிச்சுமை தொடர்பாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க, தீர்க்க காவலர்களுக்கென தனி ஆணையம் அமைக்க 2012ல் உத்தரவிட்டும் செயல்படுத்தப்படாதது பற்றி கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் அரசின் சார்பில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழக அரசுக்கு...

இந்த நிலையில், காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர் என்றும், அதனை தடுப்பதற்காக 1979ல் கொண்டுவரப்பட்ட ஆர்டர்லி முறை ஒழிப்பு அரசாணை என்னவானது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் வரும் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் நீதிபதி கிரு‌பாகரன் உத்தரவிட்டார்.

கோபமாக மாறுகிறது

மேலும் காவலர்களுக்கு கொடுக்கப்படும் மன அழுத்தமே, அப்பாவி மக்கள் மீது கோபமாக மாறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புப் பணிக்கு செல்லும் காவலர்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி நீண்ட நேரம் நிற்க வைக்கப்படுவதாகவும் கூறினார். மனித உரிமை என்பது குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல , காவலர்களுக்கும் பொருந்தும் எனக் கூறிய நீதிபதி கிருபாகரன், திருச்சியில் உஷா என்ற பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரின் கணவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதுதான் காரணம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து