முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் .அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் -அமைச்சர் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 

திண்டுக்கல், -திண்டுக்கல்லில் அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் அமைக்கப்பட்ட  நீர்மோர் பந்தலை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் திறந்து வைத்து பொதுமக்களுக்காக அர்ப்பணித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா கோடைகாலம் தொடங்கியவுடன் கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும்  நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அதன்படி கழக நிர்வாகிகளும் இப்பணியில் செவ்வனே ஈடுபட்டனர். அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாநிலம் முழுவதும்  நீர்மோர் பந்தலை அமைக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி திண்டுக்கல் மாநகர கழகம் சார்பில் பஸ் நிலையம் அருகே  நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
பகுதி கழக செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான மோகன் அனைவரையும் வரவேற்றார். மாநில கழக அமைப்பு செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன்  நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்காக அர்ப்பணித்து வைத்தார். மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ், நத்தம் தொகுதி கழக முன்னாள் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நீர்மோர் பந்தலில் குளிர்பானங்களான திராட்சை, வெள்ளரி, தர்பூசணி, இள நீர், மோர், சர்பத் மற்றும் ஏராளமான பழவகைகளும் இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, பி.ஜி.எம்.துளசிராம், அரசு வழக்கறிஞர் மோகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜேந்திரன், 8வது வார்டு செயலாளர் வீரமார்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து