முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருட சிறை - ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      சினிமா
Image Unavailable

ஜோத்பூர் : மான் வேட்டையாடிய  வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹம் சாத் சாத் ஹெயின் என்ற இந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்றிருந்தனர். அன்றைய தினம் இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வெளி மான் என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, மேற்குறிப்பிட்ட நடிகர்களும் அவருடன் இருந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, தங்களின் வாக்குமூலங்களை மேற்கூறிய 5 நடிகர்களும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும், கடந்த மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமது தீர்ப்பை ஏப்ரல் 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி, இவ்வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து