முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

ஜெய்ப்பூர் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

மும்பை பேட்...

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட் செய்தது. சூர்யகுமார் யாதவ், மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியின் ரன் குவிப்பிற்கு உதவினர். இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல் முறையாக களம் இறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் ஓரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் மும்பை அணி, 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களின் ரன் வேகத்தை ஆர்ச்சர் கட்டுப்படுத்தினார். கடைசி 5 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை அணி, 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன் 52 ரன்

அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்க வீரர்கள் ரஹானே 14 ரன்களிலும் திரிபாதி 9 ரன்களிலும் அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும், பென் ஸ்டோக்ஸும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்டோக்ஸ் எதிர்பாராத விதமாக 40 ரன்னிலும் சஞ்சு சாம்சன் 52 ரன்னிலும் அவுட் ஆக, ஆட்டம் மும்பையின் பக்கம் சென்றது. அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும், கிளாசன் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் 11 பந்துகளில் 33 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது ராஜஸ்தான். முதல் போட்டியிலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து