முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆத்திப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் விருதுநகர் கலெக்டர் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர் -தொழிலாளார் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்  நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம். சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.  இக்கூட்டத்தில் வீடு கட்டிமுடிக்கப்பட்ட வீட்டிற்கான சாவியை 5 பயனாளிகளுக்கும் மற்றும் வீடு கட்டி முடிக்கப்பட்ட 4 பயனாளிகளுக்கு பட்டியல் தொகையினையும் வழங்கினா.

  இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   பேசும்போது தெரிவித்ததாவது,
 அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் சரியாக பொது மக்களிடம் செல்ல வேண்டும்.  அரசுத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்கள் அனைவரும் கிராமத்திற்கான அடிப்படை முக்கியமான தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு, அரசு  ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து அரசு திட்டப்பணிகளை தங்களின் பங்களிப்போடு செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில் மலம் கழிப்பதை தவிர்த்து தனி நபர் இல்ல கழிப்பிடம் அல்லது பொதுஃசமுதாய கழிப்பிடங்களை பயன்படுத்தி சுகாதாரத்திற்கு நாம் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள் மூலமாக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கிராம மக்கள் அனைவரும் ஏற்கனவே அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், அந்த திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மத்திய மாநில அரசால் கூடுதலாக கிராம சுயாட்சி இயக்கம்  (கிராம சுவராஜ் அபியான்) மூலம் 7 அடிப்படையான திட்டங்களுடன்; 8 தினங்களில்  சிறப்பாக கொண்;டாடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 36 வருவாய்; கிராமங்கள் (46 கிராம ஊராட்சிகள்) தேர்வு செய்யப்பட்டு 7 திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகள் 100மூ தன்னிறைவு அடையும் வகையில் 14.04.2018 முதல் 05.05.2018 வரை திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. 2011-ம் ஆண்டு சமூக, பொருளாதார கணக்கு எடுக்கப்பட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் செய்யப்பட்;டு அவர்களுக்கு முதல் கட்டமாக அரசு திட்டங்களை எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பட்டியல் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ளது. இப்பட்டியலில் விடுபட்ட தகுதியானவர்களை சேர்க்க கிராம ஊராட்சி அலுவலகத்தை அனுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம், தெரிவித்தார்கள்.
மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அதிநவீன மின்னனு விளம்பரத்திரை வாகனம்; மூலம் தமிழக அரசின் சாதனை விளக்க வீடியோ படக்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டனர்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)  .சுரேஷ்,   உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து