முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா

திங்கட்கிழமை, 21 மே 2018      விளையாட்டு
Image Unavailable

டோங்கேசிட்டி : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

கொரியாவின் டோங்கே சிட்டியில் 5-வது மகளிர் சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடப்புச் சாம்பியன் இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்ற இந்தியாவும், இரண்டாவது இடம் பெற்ற கொரியாவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 1-0 என்ற கோல் கணக்கில் கொரியா வென்று ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது.

ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கொரியாவின் யங்சில் லீ அடித்த பீல்ட் கோலால் 1-0 என கொரியா முன்னிலை பெற்றது. எனினும் இந்திய மகளிர் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. கொரியாவின் தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் இந்திய வீராங்கனைகளால் ஊடுருவ முடியவில்லை. பெனால்டி கார்னர் முறையில் கோலடிக்க கொரிய அணி மேற்கொண்ட முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் சவிதா முறியடித்தார். இதையடுத்து இந்தியா கோப்பையை தக்க வைக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து