முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு!

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

எத்தனை பக்க வசனங்களாக இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும், அவற்றை சிறிதும் பிசிறில்லாமல், நூற்றுக்கு நூறு சதம் முழுமையாக ஒப்புவிக்கும் பேராற்றல்தான் நடிகர் திலகம் சிவாஜியின் முன்னேற்றத்திற்கு முதல் பலம்.  நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக, உயிர் மூச்சாக, ஏற்றுக் கொண்டவர் சிவாஜி கணேசன். ஒரு நடிகன் எந்த வேடமாக இருந்தாலும் அதை தயங்காமல் ஏற்று செய்வதே நிஜமான கலைஞன் என்பதில் அவர் பிடிவாதமாகவும் உறுதியாகவும் இருந்தார். கலையுலகிற்காக தமிழன்னை பெற்றுத் தந்த தவப்புதல்வன் சிவாஜி கணேசன். இந்த திரையுலகம் பூமிப்பந்தில் வாழும் வரை, அவரது புகழ் என்றும் கலைவானில் ஜொலித்துக் கொண்டே இருக்கும். அவரது நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவர் நடித்த பராசக்தி முதல் அனைத்து படங்களும் தமிழக மக்களின் நெஞ்சத்தில் இருந்து நீங்காத இடத்தை இன்றும் பெற்றுள்ளன. பாசமலர், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருமால்பெருமை, ஊட்டி வரை உறவு, திரிசூலம், தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா போன்ற அனைத்து படங்களுமே எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படங்கள். கலைத்தாயின் தவப்புதல்வனான சிவாஜி மறைந்தாலும் இன்றும் மக்கள் மனதில் அவர் நீங்காத இடத்தை பெற்றுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து