முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி தைப்பூசத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, பிப்.10 - பழனியில் இன்று வெள்ளிக்கிழமை தைப்பூசத்திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேரோட்டம் நடைபெறுகிறது. பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 1 ம் தேதி அன்று பெரியநாயகியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் திருவிழாவான இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், தோளுக்கினியாள் வாகனங்களில் ரத வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த திங்கட்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேர் உலா நடைபெற்றது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தைப்பூசத்தன்று திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். பக்தர்கள் ஏராளமானபேர் பாத யாத்திரையாக பல்வேறு காவடிகளை எடுத்துக்கொண்டும், உடல் முழுவதும் அலகுகளை குத்திக்கொண்டும் வருகைதந்தனர். பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள குடமுழுக்கு நினைவரங்கில் விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக பட்டிமன்றம், சொல்லரங்கம் நடத்தப்பட்டன. எட்டாம் நாள் திருவிழாவாக நேற்று அருள்மிகு வள்ளி,தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி, திருஆவினன்குடி கோவில் அருகே பழனி வையாபுரி கண்மாய் அருகே நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியை காண தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 9 மணிக்குமேல் நான்கு ரத வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சுவாமி பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள இருக்கிறார். நாளை 10 வது நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேர் உலா நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்