முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில்லி சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சில்லி சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் - 400 கிராம் .
  2. முட்டை – 1.
  3. மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்.
  4. சீரகத்தூள் -1. 1/2 ஸ்பூன்.
  5. கரம் மசாலா -  1/4  ஸ்பூன்.
  6. இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
  7. சோயா சாஸ் – 4  ஸ்பூன்.
  8. கான் பிளவர் மாவு  - 4 ஸ்பூன்.
  9. ஆல்பிரபோஸ் மாவு -  ஒரு ஸ்பூன்.
  10. பொடியாக நறுக்கிய பூண்டு -  5 பல்.
  11. பொடியாக நறுக்கிய இஞ்சி -  ஒரு துண்டு.
  12. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2.
  13. பொடியாக நறுக்கிய குடைமிளகாய்  - 1/2.
  14. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  15. ரெட் சில்லி சாஸ்  - 3 ஸ்பூன்.
  16. வினிகர் - ஒரு ஸ்பூன்.
  17. தக்காளி சாஸ் -  2 ஸ்பூன்.
  18. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்.
  19. கான் பிளவர் மாவு - 1/2 கப்.
  20. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  21. எண்ணெய்  - 1/2 லிட்டர்.
  22. உப்பு -தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 400 கிராம் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் தேவையான  அளவு உப்பு,ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,சீரகத்தூள் 1/2 ஸ்பூன்,கரம் மசாலா 1/4  ஸ்பூன்,2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2 ஸ்பூன் சோயா சாஸ்,கான் பிளவர் மாவு 4 ஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன் ஒரு ஸ்பூன் ஆல்பிரபோஸ்மாவை போட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விட்டு சிக்கனை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய்  சூடானவுடன் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை  போட்டு பொரிக்கவும்.
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன்  எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய்  சூடானவுடன் பொடியாக நறுக்கிய 5 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  2,பொடியாக நறுக்கிய பாதி குடைமிளகாய் மற்றும்   பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக  வதக்கவும்.
  9. இதனுடன் சோயா சாஸ் 2 ஸ்பூன்,3 ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்,ஒரு ஸ்பூன் வினிகர்,2 ஸ்பூன் தக்காளி சாஸ்,ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  10. இதனுடன் 1/2 கப் கான் பிளவர் மாவு கரைசல் மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளவும்.
  11. இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கனை போட்டு கலந்து கொள்ளவும்.
  12. பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போடவும்.
  13. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  14. சுவையான சில்லி சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago