முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      உலகம்
Gaza 2024-09-10

காசா, காசாவின் மவாசி கடற்கரையோர பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய அண்மைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் முக்கிய கமாண்டோக்கள் சிலர் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் அங்கு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,972 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 94,761 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும், அதே சமயம் 200-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

 காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவின் மசாவி கடற்கரையோரப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனத்தின் வாபா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மவாசி பகுதி கான் யூனிஸுக்கு தெற்கே உள்ளது. இதனை இஸ்ரேல் பாதுகாப்பான பகுதியை அறிவித்திருந்தது. 

இருப்பினும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச கண்டனத்தைப் பெற்றுள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ பொதுமக்கள் வாழும் பகுதி என்றாலும் அங்கிருந்து ஹமாஸ் கமாண்டோக்கள் இயக்குவது உறுதிப்படுத்தப்பட்டதால் வான்வழி கண்காணிப்புக்குப் பின்னர் துல்லியமான ஆயுதங்களைக் கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளோம் எனத் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளது. தாக்குதல் தொடர்பான   வலைதள படங்கள் அங்கே பெரும் பள்ளங்கள் உருவாகியிருப்பதைக் காட்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து