முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துலீப் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 'பி' அணியில் ரிங்கு சிங்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      விளையாட்டு
Ringu-Singh 2023-12-19

Source: provided

மும்பை : துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியா பி அணியில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் டெஸ்ட்....

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையி 2024 -25 சீசன் தொடங்கியுள்ளது. இதன் முதலாவது சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த தொடரில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர். இதனால் அவர்கள் 2-வது சுற்றிலிருந்து விலகியுள்ளனர். சர்பராஸ் கான் தேர்வாகியிருந்தபோதும் 2-வது சுற்றில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பி அணியில்.... 

இதில் இந்தியா பி அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், பண்ட் மற்றும் யாஷ் தயாள் ஆகியோருக்கு பதிலாக ரிங்கு சிங், சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் ஹிமான்ஷு மந்த்ரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள்னர். இந்தியா ஏ அணியின் கேப்டனாக இருந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக பிரதாம் சிங் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக அக்ஷய் வாட்கரும், ஜூரலுக்கு பதிலாக எஸ்.கே.ரஷீத்தும், குல்தீப்புக்கு பதிலாக ஷாம்ஸ் முலானியும், ஆகிப் கானுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா டி அணியில் ஒரே மாற்றமாக அக்சர் படேலுக்கு பதிலாக நிஷாந்த் சந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா சி அணியில் மாற்றமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து