முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்த மம்தா அழைப்பு - மக்கள் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
Mamtha 2023-04-13

Source: provided

புதுடில்லி : துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கவனம் செலுத்துமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளது, பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை 2-ம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை.

இந்நிலையில், மம்தா பானர்ஜி, பொதுமக்கள் தங்கள் கவனத்தை போராட்டங்களில் இருந்து துர்கா பூஜை விழாக்களுக்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ., விசாரணையை விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கு, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டர் தாயாரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது.

'துர்கா பூஜை அல்லது வேறு எந்த பண்டிகையையும் நாங்கள் ஒருபோதும் கொண்டாட மாட்டோம். அவரது கருத்துகள் உணர்ச்சியற்றவை. அவர் எங்கள் மகளைத் திருப்பித் தரட்டும். அவர் குடும்பத்தில் இது நடந்திருந்தால் அவர் இதையே சொல்லியிருப்பாங்களா? என் வீட்டில் விளக்கு என்றென்றும் அணைந்து விட்டது. அவர்கள் என் மகளை தூக்கி எறிந்தார்கள். எனது மகளுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் ஒடுக்க முயற்சிக்கின்றனர் என பயிற்சி பெண் டாக்டர் தாயார் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து