முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பென்குயின்கள் வீனஸ் கிரகவாசிகளாஆச்சரியமூட்டும் சயின்ஸ் வீடியோ வைரல் !!!

அறிவியல் ஆய்வுகள் எப்போதும் நமக்கு ஆச்சரியமூட்ட தவறுவதில்லை. மனித குலமானது அறிவியல் ஆய்வுகளின் வழியேதான் புதிய பரிமாண வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்றைய நவீன யுகத்தில் அறிவியலுக்கு துணையாக ஆயிரக்கணக்கான உபகரணங்களும், தொழில் நுட்பங்களும் உதவுகின்றன. மரபணு சோதனை, கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம அணு பரிசோதனை, ரசாயன ஆய்வுகள் என மிக நுணுக்கமான பரிசோதனை முறைகள் உலகுக்கு வியக்க வைக்கும் செய்திகளை நாள்தோறும் தந்து கொண்டிருக்கின்றன. ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் குறித்து மனிதனுக்கு எப்போதும் அச்சமும் ஆர்வமும் கலந்தே இருந்து வந்துள்ளது. தன்னைப் போல அல்லது தன்னை விட கூடுதலாக சிந்திக்கும் உயிரினம் இந்த அண்ட வெளி பரப்பில் இருக்குமா என்ற தேடலே வானியல் அறிவியலை வளர்த்தெடுத்தது. கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டடைய செய்துள்ளது. அதன் வழியில் தற்போது புதிய ஆய்வாக தெற்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள பனிப் படர்ந்த பிரதேசங்களில் வசிக்கும் gentoo penguins எனப்படும் பென்குயின்கள் ஏலியன்ஸ்களாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அவற்றின் எச்சத்தை ஆய்வு செய்த போது வீனஸ் கிரகத்தில் காணப்படும் ஒரு வகை ரசாயனம் இவற்றில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர் டாக்டர் Dave Clements கூறுகையில், பாஸ்பைன் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்தது உண்மைதான் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது என்ன மாதிரியான வேலைகளை செய்கிறது எனத் தெரியவில்லை. ஒரு வகை பாக்டீரியாக்கள் இந்த வகையான பாஸ்பைன் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இவற்றிற்கான தடயங்களை பென்குயின்களின் எச்சத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளோம். வீனஸ் கிரகத்தை சுற்றி இந்த பாஸ்பைன்கள் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இதனால் வீனஸில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தியுள்ளன. எனவே பென்குயின்கள் வீனஸ் கிரகத்தின் ஏலியன்களாக இருக்கலாம் என சந்தேகிக்க வாய்ப்புள்ளது என அவர் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Scientific studies do not always fail to surprise us. Mankind has reached a new dimension only through scientific research. In today's modern age, thousands of tools and technologies are helping to support science. The most sophisticated methods of testing, such as genetic testing, organic dating, also known as carbon dating, are delivering astonishing news to the world on a daily basis. Has made the discovery of planets and stars. On its way, scientists have speculated that gentoo penguins, known as gentoo penguins, may be aliens inhabiting the icy regions of the South Atlantic.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago