முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரித்தாளும் கொள்கையை காங்., கடைபிடிக்கிறது: மோடி

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சேலம் ஏப்.17 - 50 ஆண்டுகளாக மாநிலங்களிடையே பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது என சேலம்_கிருஷ்ணகிரியில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடி சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து தமிழகத்தில் அவர் 2 வது கட்ட பிரச்சாரத்தை நேற்று துவக்கினார்.முதலில் அவர் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசினார். பின்னர் சேலத்தில் தேமுதிக கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷை ஆதரித்து பேசினார்..
இதற்காக அவர் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்படர் மூலம் கிருஷ்ணகிரி வந்திறங்கினார். அங்கு பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசினார்.பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மாலை 5.35 மணிக்கு சேலம் வந்த அவர் சேலம் இரும்பாலை ஹெலிபேடு தளத்தில் இறங்கினார். பின்னர் இரும்பாலை வித்யா மந்திர் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.. மேடை ஏறிய மோடி நேராக மேடையின் ஓரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாஜக பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பேசினார்.  பின்னர் பேசிய நரேந்திர மோடி அனைவரும் தமிழில் வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அவர் பேசியதாவது.நான் இரும்புமனிதரின் வழித்தோன்றலாக வந்தவன். அந்த வகையில் சேலம் இரும்பாலையில் பேசுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.சேலம் ஸ்டீஸ் பிளாண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டீல் மலேசியாவின்  உலக இரட்டை கோபுரத்தில் உள்ளது.மெல்பேன் ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் அரிய விஷங்கள் உள்ளது.சேலத்திற்கு சக்தி உள்ளது. ஆனால் பயன்பபடாமல் உள்ளது. சேலம் இரும்பாலைக்கு உற்பத்தி போருட்ககளுக்கு  சர்வதேச அங்கீகாரம் இல்லை.சர்வதேச அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டார்கள் யாருக்கு வாக்கு அளிக்கவேண்டும் என்று தேசத்தை விற்பவர்களைவிட சாயா(டீ)விற்பவன் மேல் என்று நினைத்துவிட்டார்கள்.
வெள்ளைக்காரனின் பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கடைபிடித்து .மாநிலங்களில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது.காரணம் மின்சாரம்,தண்ணீர் ,மொழி இவற்றை வைத்து அவர்களை பிரித்தாளுகிறது.50 வருடமாக காங்கிரஸ் இதை செய்து வருகிறது. ஒரு நாள் தேசம் ஒன்றாகும். அப்போது காங்கிரஸ் காணாமல் போய்விடும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களை அரவணைத்து செல்வோம். அனைவரும் ஒன்றாக முன்னேற வழி செய்வோம்.காங்கிரஸ் 21 ம் நூற்றாண்டிற்கு ஒத்துவராத கொள்கையை கடைபிடிக்கிறது.இதுபோன்ற அரசியலை பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள்.மக்கள் செயல்பாடுகளைதான் எதிர்பார்க்கிறார்கள்.வாக்குறுதிகளை அல்ல.சேலத்தில் 60 சதவீதம் நகரமயம்.73 சதவீதம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.65 சதவீதம் கழிப்பறை வசதி இல்லை.50 சதவீத வீடுகளில் சாக்கடை வசதி இல்லை.60 வருடங்களாக இப்படிதான் இருக்கிறது. ஒருநாடு முன்னேற்றமடைய சுகாதாரம் முக்கியம்.அதனால்தான் வாஜ்பாய் முழுசுகாதார திட்டம் கொண்டுவந்தார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 60 மாதங்களில் முழுசுகாதார திட்டத்தை செயல்படுத்துவோம்.
காந்தியின் 150 வது பிறந்தநாளில் எல்லா வீட்டிற்கு டாய்லட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.திறந்தவெளி மலம் கழிப்பதை அறவே ஒழிப்போம்.75 வது சுதந்திர தினவிழாவில் எல்லா ஏழைகளுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்போம். சேலத்தில் நெசவு தொழில் முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம்.
  மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் சேலம் முன்னிலையில் உள்ளது.ஆனால் மரவள்ளிகிழங்கு விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.அவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.மரவள்ளிக்கு நியாமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேளாண்மை துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தடையில்லா தண்ணீர், தடையில்லா மின்சாரம் வழங்கி விவசாயத்தை முன்னேற்றுவோம்.விவசாயிகள் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். நதிகள் இணைக்கப்படும்.அப்படி இணைக்கப்பட்டால் தமிழகத்திற்கு தங்குதடையின் தண்ணீர் கிடைக்கும்.போதிய மின்சாரமும் கிடைக்கும். இதனால் தமிழகம் இந்தியா மாற்றியமைக்கும் அளவிற்கு சிறப்பான மாநிலமாக திகழும். காங்கிரஸ் கட்சி  கடந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.நான் 60 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.. இந்த கூட்டத்தில் பா.ம.க.துணை தலைவர் மு.கார்த்தி,தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.பார்த்தீபன்,மோகன்ராஜ், தேமுதிக சேலம் வேட்பாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சேலம் பாஜக மண்டல தலைவர் முருகேசன்,மாவட்ட தலைவர் அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.பாதுகாப்பு பணிகள் மத்திய மண்டல ஐ.ஜி.ராமசுப்பிரமணியன்,சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்