முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் மீண்டும் வெள்ளம்- நிலச்சரிவு: 6 பேர் பலி

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூலை.29 - உத்தரகாண்டில் பெய்து வரும் கணமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகினர். இதனால் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகாசி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 100-க்கணக்கான மக்கள் சிக்கி பலியாயினர். வீடுகள் உள்பட கட்டிடங்கள், கோவில்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கேதார்நாத், பத்ரிநாத் பக்தர்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் ஹேலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இது நூற்றுக்கணக்கானோர் மாயமாகினர்.

இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்று வநத்னர். இதன் பிறகு உத்தரகாண்டில் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு செல்லும் சாலைகள் சரி செய்யப்பட்டு யாத்திரை தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக உத்தரகாண்டில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டிறுக்கிறது. கடந்த கங்கோத்ரி சென்ற பாபா ராம்தேவ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு சிக்கி தவித்தனர். இதற்கிடையே நேற்று முன் தினம் பிதோராகர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியானதாக கலெக்டர் செம்வால் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில், 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்துக்கு பேய் மழை காணப்படும் என வாணிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக ரிஷிகேஷ், கேதார்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு யாத்திரையை ரத்து செய்யது உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்