முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 3-வது ஒரு நாள்: மீண்டும் கலங்கடிக்குமா இந்தியா?

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

நாட்டிங்காம், ஆக.30 - இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இன்று டோனி தலைமையிலான அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐந்து ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இந்தியா 133 ரன்கள் வித்தியாச்ததில் அபார வெற்றிபெற்றது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. 2-வது போட்டியில் பெற்ற வெற்றிய போலவே இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டுமானால் இந்த போட்டியிலும் வென்று இங்கிலாந்தை கலங்கடிக்க வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் ரெய்னாவின் அதிரடி சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது, அதே போல் இந்தியாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்து சரிவில் இருந்து மீட்ட ரகானே இந்த ஆட்டத்தில் தனது பலத்தை வெளிபடுத்துவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் டோனியும், தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதே போல் மற்ற பேட்ஸ்மேன்களும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். வீராட் கோலி தனது திறமையை நிருபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சமி ஆகியோர் சிற்பபாக செயல்பட்டனர். இதே மாதிரி பந்து வீச்சும் நிலையாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியில் தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. தலைசிறந்த வீரர்களை கொண்ட அந்த அணி சம நிலை செய்யும் ஆர்வத்துடன் இருக்கிறது.

இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் துர்தர்ஷன் இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அணிகள் விவரம்:

இந்தியா:

டோனி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், விராட் கோலி, ரகானே, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், புனேஸ்வர்குமார், முகமது சமி, மொகித் சர்மா, ஸ்டுவர்ட் பின்னி,உமேஷ் யாதவ், அம்பதி ராயுடு, குல்கானி, சஞ்சு சாம்சன், கரன் சர்மா.

இங்கிலாந்து:

கூக் ( கேப்டன்), ஹால்ஸ், இயன்பெல், ஜோரூட், மார்கன், பட்லர், ஸ்டோக்ஸ், ஹோக்ஸ், ஜோர்டான், டிரெட்வெல், ஆண்டர்சன், பேலன்ஸ், மொயின் அலி, ஸ்டீவன் பின், ஹேரி குர்னே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்