முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய மந்திரி சபை இன்று பதவியேற்பு

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக் 31 - மராட்டிய மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 122 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆட்சி அமைக்க மேலும் 23 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் 63 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனா மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. மராட்டியத்தின் புதிய முதல்வராக அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் விழாவில் பட்னவிசும், அவர் தலைமையிலான புதிய மந்திரிகளும் பதவியேற்க உள்ளனர்.

மராட்டிய மாநில அரசு வரலாற்றில் முதன் முறையாக இந்த மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. புகழ் பெற்ற இந்த கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும். மராட்டிய மாநிலத்தில் முதன் முதலாக பாஜக அதிக அதிகாரங்களுடன் ஆட்சி அமைப்பதால் இதற்கான தொடக்க விழாவை இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவிற்காக பிரபல ஆர்ட் டைரக்டர் நிதின் தேசாய் விசேஷமாக மேடை அமைத்துள்ளார். தாமரை மலர்ந்துள்ளது போல அமைக்கப்பட்டுள்ள அந்த மேடையில் 200 விஐபிக்கள் அமர முடியும். மேடையில் சத்ரபதி சிவாஜி உட்பட மராட்டிய தலைவர்களின் ப டங்கள் இடம் பெற்றுள்ளது. பட்னவிஸ் பதவியேற்பு விழாவை சுமார் 2 மணி நேரம் நடத்த திட்டமிட்டுள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சுமார் 4 ஆயிரம் விஐபிக்கள் பங்கேற்கவுள்ளனர். எனவே அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு தடவை மும்பையி்ல் பேசும் போது, இந்த கடலோரத்தில் தாமரை மலர்வதை பார்க்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் பதவியேற்பு விழா நடக்கும் வான்கடே மைதானம் அருகில் உள்ள கடல் பகுதியில் 25 பெரிய படகுகளில் தாமரை கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கேட்வே இந்தியா பகுதியில் 10 பிரம்மாண்ட தாமரை கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வான்கடே மைதானத்தில் நடக்கும் பதவியேற்பு விழாவை மக்கள் கண்டுகளிக்க மும்பையில் ஆங்காங்கே மிகப் பெரிய டி.வி. திரை அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்