முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      புதுச்சேரி
Image Unavailable

செஞ்சி,
செஞ்சி அருகே தீவனூரில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் பெ.லெனின் மற்றும் மன்றத்தின் தலைவர் பொறியாளர் க.இராசாதேசிங்கம், செயலர் அண்ணமங்கலம்முனுசாமி் ஆகியோர் தீவனூரில் கள ஆய்வு மேற்கொண்டபோது கல்வெட்டொன்றை கண்டுபிடித்து அதிலுள்ள செய்தியை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் நெடுஞ்சாலையில் செஞ்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவனூர் என்னும் கிராமத்தில் நெடுஞ்சாலைக்கு வடபுறம் வடக்கு நோக்கி புதியதாக அமைக்கப்பட்ட செல்லியம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலின் இடது புறம் கிழக்கு முகமாக நடப்பட்டுள்ள சுமார் 75 செ.மீ உயரமும், 50செ.மீ அகலமும் கொண்ட ஒருபலகைக்கல்லில் கல்வெட்டொன்று காணப்படுகிறது. கல்வெட்டின் எழுத்தமைதியையும் அதன் செய்தியையும் ஆய்வுக்குட்படுத்துகையில் அக்கல்வெட்டு சுமார் 18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.
அக்கல்வெட்டுள்ள பலகைக்கல் நெய் பூசி மஞ்சலாடை கட்டி வழிபாட்டில் உள்ளது. கல்வெட்டின் வாசகம்: 1.விரோதி கிறுதி வ, 2. ருஷம் அற்பதிமா, 3. தம்ஓயிமா நாடான, 4.கிடங்கில் பற்று அள், 5, ளம் புத்தூர் களப்பா, 6, ளர் ஆணைமெலழகியார், 7 புத்தரம் பொருளாளப், 8, பெருமாள் தீபநல்லூர், 9, செல்வி அம்மையை, 10 பிரதிஷ்டையும் தி, 11, ருக்கொயிலும் தீபா, 12. தமும் ஸதா ஸெவை. 12. தொத்திறம் தொ.. கல்வெட்டு கூறும் செய்தி: விரோதி கிருது ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒய்மா நாட்டு கிடங்கில்(திண்டிவனம்) பற்றைச் சேர்ந்த அள்ளம் புத்தூர் களப்பாளர் ஆணைமேல் அழகியார் மகன் பேரருளாளப் பெருமாள் என்பவர் தீவனூர் என்னும் தீபநல்லூரில் செல்வி அம்மையைப் பிரதிஷ்டை செய்து அவருக்குரிய திருக்கோயிலையும் அமைத்து தொடர்ந்து தீபாராதனை சேவை நடைபெற ஆவன செய்துள்ளதாக இக்கல்வெட்டு வாசகம் தெரிவிக்கின்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்