முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலகுண்டில் தென்னை மரம் ஏறும் பயிற்சி வகுப்பு நிறைவுவிழா : 240 பேருக்கு 7.20 லட்சம் மதிப்பில் மரம் ஏறும் மிஷின் வழங்கப்பட்டது

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலகுண்டு : திண்டுக்கல்மாவட்டம் வத்தலகுண்டில் தென்னைமரம் ஏறும்பயிற்சி வகுப்புநிறைவுவிழா 240 பேருக்கு 7.20 லட்சம் மதிப்பில் மரம்ஏறும்மிஷின் வழங்கப்பட்டது தலா 2 இலட்சம் வீதம் 4.80 கோடி பாதுகாப்பு பாலிசிவழங்கப்பட்டது

வத்தலகுண்டுவில் தென்னைமரம்ஏறும்பயிற்சிவகுப்புகள் இந்திய தென்னை வளர்ச்சிவாரியம், திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம்சார்பில் ஒருமாதகாலமாக நடைபெற்று வருகிறது. இதன்நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தென்னைஉற்பத்தியாளர் சங்கத்தலைவர் முருகேசன் தலைமை வகித்து தனது சிறப்புரையில் வேலையற்ற விவசாய இளைஞர்களுக்கு தென்னை மரம் நண்பன் என்னும் திட்டத்தின் மூலம் இந்தியதென்னை வளர்ச்சி வளர்ச்சி நிதி உதவியுடன் திண்டுக்ல் தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக 2016ம் ஆண்டிற்கான  தென்மை மரம் ஏறம் பயிற்சி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. பயிற்சியின் போது தென்மை மரம் சார்ந்த தொழிலின் நன்மை, பெருளாதார மேம்பாடு குறித்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்பான பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சியாளது தென்மை மர தொழிலில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும் என்பது உண்மையாகும் என்று இதனை தென்னை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பேசினார்.  ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் லிங்கையன்,காசி, தென்னை உற்பத்தியாளர்கள் சங்க இயக்குனர்கள் தேன்நிலா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை காவல்துறை துணைக்கண் காணிப்பாளர் சுருளியாண்டி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரம் ஏறும் கருவி மற்றும் சான்றிதழ் வழங்கினார். இப்பயிற்சி வகுப்பில் மொத்தம் 240 கற்பிக்கப்பட்டு மரம் ஏறும் கருவிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில், காந்திகிராமப்பல் கலைகழகவேளாண்து றைவல்லுநர்கள், வேளாண்துறை அலுவலர்கள், பயிற்சியாளர்கள் மரம் ஏறும்பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் தென்னைமரம்ஏறும்போது, அம்மரத்தில் என்ன நோய்தாக்கியுள்ளது,

தென்னையோடு ஊடுபயிர் என்னசெய்யலாம், மரத்திற்கு தேவையான தண்ணீர்வசதி, உரம் இடுதல், வண்டுதாக்குதல் நோய் போன்றவைகளை, விவசாயிகளிடம் எடுத்து கூறிமரத்தை பாதுகாக்கும் முறையும் பற்றிவிளக்கினர். இந்நிகழ்வில், இயக்குனர்கள் ஜெயபாண்டி, ரங்கராஜன்உள்பட திண்டுக்கல், நிலக்கோட்டை, சித்தரேவு, அய்யம்பாளையம், ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்