முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் 142 பயனாளிகளுக்கு ரூ.2394000- மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது : கலெக்டர் சு.பழனிசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்

அவர்களின் ஆணையின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோரை இழந்த ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் ர்ஐஏ பாதிப்புக்குள்ளான குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் கல்வி உதவிக்காக செயல்படுத்தப்படும் நிதியாதரவு திட்டத்தின் கீழ் கடந்த 2013-14, 2014-15 மற்றும் 2015-16ம் நிதியாண்டுகளில் 142 பயனாளிகளுக்கு மாதம் ரூ. 2000 வீதம் ரூ.2394000 வழங்கப்பட்டுள்ளது.

மறுவாழ்வு

 

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், காவல்துறை அலுவலர்கள், ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள், சமூக நல பணியாளர்கள்;, தொழிலாளர் நல அலுவலர், சைல்டுலைன் பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவினர் திருக்கடையூர், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, இதுவரை 11 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டு குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் தொழிலாளர் நல அலுவலர்களுடன் இணைந்து மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் ஆய்வு செய்து கடந்த 2013ம் ஆண்டு முதல் இன்றுவரையில் 80 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளனர். அவர்களில் 22 குழந்தைகளை நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் குருகிய கால பயிற்சியிலும், 38 குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், கணினி பயிற்சியில் 5 குழந்தைகளும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சேர்த்துவிடப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெற்றோரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் 15 பேர் மீட்கப்பட்டு அவர்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அரசு பதிவு பெற்ற தத்து வள மையங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ மாணவிகள், வளர் இளம் பெண்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட குழந்தைகள் சார்பில் இதுவரையில் 112 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்