முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சீராக விநியோகிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது.

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      மதுரை
Image Unavailable

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சீராக விநியோகிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம்;   கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ   தலைமையில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது :

முதல்வர் ஜெயலலிதாவின் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகருக்கு தென்மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மக்களும், சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் என அனைவரும் அதிகளவில் வந்து செல்லும் புராதன நகரமாக திகழ்கிறது. தற்போது நடைபெறுகின்ற இந்த கூட்டத்தின் நோக்கம் மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் நடைபெறுகிறது. தற்போது எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. வரும் காலங்களில் மழை எந்தளவு பெய்யும் என்று கணக்கிட முடியாது. எனவே மதுரை மாநகராட்சி மக்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு எந்த இடையூறு இல்லாமல் செய்து தர வேண்டும்.

தற்போது வைகை அணையில் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டில் 46 அடியாக இருந்தது. அதே போல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 111 அடியாக உள்ளது. கடந்த ஆண்டில் 118 அடியாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டில் மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உள்ள குடிநீர் பற்றாகுறையை சமாளிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுப் பகுதிகளில் தற்போது 2085 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மேலும் 150 போர்வெல்கள் போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர்; பற்றாக்குறை இருக்கும் இடங்களில் கூடுதலாக லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக மதுரை மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அதை போர்க்கால அடிப்படையில் செய்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஊரக மற்றும் நகரமைப்பு துறை திட்ட நிதி, சுற்றுலா துறை திட்ட நிதி, சிறப்பு சாலைகள் திட்ட நிதி, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, அபிவிருத்தி இடைவெளி நிரப்பும் திட்ட நிதி, மாமன்ற உறுப்பினர்கள் வார்டு மேம்பாட்டு நிதி ஆகிய பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இக்கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குஇரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள்   வி.வி.ராஜன் செல்லப்பா,  ஏ.கே.போஸ், முன்னாள் மேயர் (பொ)  கு.திரவியம், துணை ஆணையாளர்  செ.சாந்தி, நகரப்பொறியாளர்   மதுரம், நகரமைப்பு அலுவலர்   ரெங்க நாதன், உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன்;, உதவி ஆணையாளர்கள்  கௌசலாம்பிகை,   பழனிச்சாமி,  செல்லப்பா   நாராயணன், செயற்பொறியாளர்கள்   அரசு,   ராஜேந்திரன்,   சந்திரசேகர்,   சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்