முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் : கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருச்சி

அம்மா" திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர்பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்பஅட்டை, நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

வாரம்தோறும்

 

அனைத்து கிராமங்களில் வாழும் கடைகோடி மக்களுக்கும் அதிகமான அரசு சேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை பின்வரும் கிராமங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.

அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களில் வட்டாட்சியர் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காண்பர். எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்