ஜிலியம்பாறை ஒன்றியத்தில் பரமசிவம் எம்,எல்,ஏ பொதுமக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      திண்டுக்கல்
guu

 வேடசந்தூர் : குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வி.பி.பி.பரமசிவம் எம்,எல்,ஏ பொதுமக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் மல்லப்புரம், கரிக்காலி திருக்கூர்ணம், இரா.வெள்ளோடு ஆகிய ஊராட்சிகளில் குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார் தண்ணீர் பிரச்சனைகள் பற்றி அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார் வறட்ச காரணமாக போர்வெல் நீர்மட்டம் குறைந்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது காவிரி தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஒவ்வொறு கிராமாகச் சென்று தண்ணீர் பிரச்சனையை கேட்டறிந்து பொதுமக்களுக்கு தண்ணீர் தடையில்லாமல் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பொதுமக்களிடம் குறைகேட்கும் பொழுது ஒன்றிய கழக செயலாளர் மலர்வண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமுத்து, நாகராஜ், அதிமுக நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், கலைமணி, சிவக்குமார், போதும்பொண்ணு, மருதமுத்து, அவைத்தலைவர் பொன்னுச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள், ரத்தினவேல், ரவி ஊராட்சிகழக செயலாளர் சீனிவாசன், குமரேசன், ஊராட்சி செயலர் மூக்கன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: