முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு நடத்த கோரி நெல்லையில் 4வது நாளாக ஆர்ப்பாட்டம் - 4 ஆயிரம் பேர் திரண்டனர்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      திருநெல்வேலி

நெல்லை

 

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற கோரி நெல்லையில் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 4 வது நாளாக பாளை வ.உ .சி திடலில் 4 வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்.

 

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த கோரி கடுமையான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ரயில் மாறியல்களும் நடைபெற்றன நெல்லையில் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டன ,ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக நெல்லை- திருச்சந்தூர், நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரெயில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் தென்காசியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது . ஆட்டோ, டாக்சிகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை, நெல்லை மாநகரத்தில் பாளையங்கோட்டை பகுதியில் முழுமையான கடையடைப்பு நடைபெற்றது.

 

தினசரி சந்தை,பல்பொருள் அங்காடிகளும் பூட்டியே இருந்தன , ஆட்டோக்கள் 90% ஓடவில்லை இதே போல் சில தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை ,திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன , ஜல்லிக்கட்டு ஆதரவாக டவுனில் வியாபாரிகளும் ,நகை கடை உரிமையாளர்களும் கடைகளை பூட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர் ,மோட்டார் தொழிலாளர்கள் பைக் பேரணி நடத்தினர் ,திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர் ,ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் இதில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., தொமுச மற்றும் தோழமை சங்க தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர் ,மாவட்டத்தில் 4 லட்சம் பீடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

 

வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தி கொண்டிருப்பவர்களை ஸ்ரீபுரம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் கார் ஓட்டுனர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவை தந்து வாழ்த்து தெரிவித்தனர். வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 4 வது நாள் போராட்டத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்