முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பான விவரங்கள் அறிய உதவி மையத்தை அணுகலாம் ஆணையாளர் சந்தீப் நந்தூரி தகவல்.

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உதவி மையத்தில் ஆணையாளர்  சந்தீப் நந்தூரி  ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து ஆணையாளர்   தெரிவித்ததாவது :

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டி வரும் பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு விண்ணப்ப படிவத்தில் முழுவதுமாக பூர்த்தி செய்யாமல் வழங்குவதால் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாத ஒரு சிலர் பிறப்பு மற்றும் இறப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்காக வெளி நபர்களை அணுகி வருகின்றனர். எனவே இவற்றை தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி மைய அலுவலகம் தரைதளத்தில் பதிவு வைப்பறை அருகில் புதிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கென இரண்டு  பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பிறப்பு இறப்பு சான்றிதழ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குவதுடன்,  பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்தவர்கள் அது தொடர்பான சந்தேகங்களையும் அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என ஆணையாளர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்