முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம்மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டம்மை நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவது தொடர்பாக ஆலோசணை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நiபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில், மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை(ரூபல்லா)-விளையாட்டு அம்மை போன்ற நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடர்பாக பொதுசுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை(ரூபல்லா)-விளையாட்டு அம்மை போன்ற நோய்களைத் தடுத்திடும் வகையில் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களில்  நடத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு,  வருகின்ற  பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் விடுபடாமல் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்திட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேசிய தடுப்பூசி திட்டத்தில் தட்டம்மை தடுப்பூசிக்கு பதிலாக தட்டம்மை ரூபல்லா கொடுக்கப்படவுள்ளது. இதுவரை தனியார் மருத்துவமனையில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இத்தடுப்பூசியானது தமிழகம் முழுவதும் அரசினால் இலவசமாக வழங்கப்படவுள்ளது.  இது மிகவும் பாதுகாப்பானது. தேசிய தடுப்பூசி திட்ட வழிகாட்டுகுழுவின் வழிகாட்டுதலில் படி நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

இத்தடுப்பூசியானது மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில் (எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்புவரை) படிக்கும் குழந்தைகளுக்கும், கிராமங்களில் உள்ள 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட பள்ளிச்செல்லா குழந்தைகளுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுசுகாதாரதுறையில் உள்ள மருத்துவர்கள்,சமுதாயநலச் செவிலியர்கள், பகுதிசுகாதார செவிலியர்கள், கிராமசுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், நடமாடும் மருத்துவகுழுக்கள் மற்றும் பள்ளி மருத்துவ  குழுக்கள் மூலம் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு.பவானி உமாதேவி (ராமநாதபுரம்), மரு.மீனாட்சி (பரமக்குடி), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு உள்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்