முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 29 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்   வீட்டு  வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை  அமைச்சர்  உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி  ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர்ஃஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன்   தலைமையில் நடைபெற்றது.

குழுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில், 2017 -18-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடுகள் திட்டம் கிராமின், பிரதான மந்திரி கிராம பதக் யோஜனா, தூய்மை பாரத இயக்கம், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய நெடுஞ்சாலை , பிரதான மந்திரி பசல் பீமா யோஜனா, தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , அம்ரூட் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் குடிசை மாற்று வாரியம் உட்பட பல்வேறு திட்டங்களின் செயல்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள  பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை விரைவாகவும், துரிதமாகவும் முடித்திட  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  சி.மகேந்திரன்,      சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு),கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர்  ஏ.நடராஜன் (பல்லடம்), செ.காளிமுத்து (தாராபுரம்) க.ஜெயராமன் கிருஷ்ணன் (மடத்துக்குளம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) மைக்கேல், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ம.அசோகன்,  உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து