முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகப்பரு என்றால் என்ன? எவ்வாறு ஏற்படுகிறது?

வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது. பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. இது பதின்ம வயதில் வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் போது துவங்குகிறது. எண்ணெய் சுரப்பிகள் அடர்த்தியாக எண்ணிக்கைகளுடன் கூடிய தோல் பருத்தலான முகம், மார்பின் மேற்பகுதி, பின்புறம் மற்றும் கைகளின் மேற்பகுதியில் மிக அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.

குறைந்தபட்சம் 90 சதவீதம் மக்களை இது வாலிப வயதில் பாதிக்கின்றது. இது ஆண் பாலின ஹார்மோன் அதிகரிப்பின் காரணமாக ஏற்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு தானாகவே சிறிது காலத்தில் குறைந்து மறைந்து விடுகிறது. அல்லது குறைந்த அளவில் தொடர்கிறது. இருப்பினும் இது முழுமையாக மறைவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என கண்டறிய எந்த வழியும் இல்லை.

காரணங்கள்:

1. எண்ணெய்ச் சுரப்பி (மெழுகு சுரப்பி) களில் ஏற்படும் அடைப்பு, சுரப்பி பெரிதாதல், எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, இறந்த தோல் செல்கள், சூழ்நிலையால் அசுத்தங்கள்,

2. நுண்கிருமி தாக்கம் : “புரோப்யோளி பாக்டீரியம் ஆக்னே” இதன் தாக்கம் காரணமாக பருக்களில் சுழற்சி ஏற்பட்டு, சிவந்து, சீழ்பிடிக்க வகை செய்கிறது. மேலும் இதனால் பருக்கள், முகத்தில் கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது.

3. காரணிகள்:

1. மரபு வழி (குடும்ப வழி)

2. ஹார்மோன் மாற்றம்,

3. மாதவிடாய் சுழற்சி,

4. தோல் சுழற்சி,5. மன அழுத்தம்,

6. சில வகை மருந்துகள்,

7. இரசாயன சேர்மங்கள்,

8. உணவு பழக்க முறை அதிக சர்க்கரை உணவுகள், அதிகப்படியான கொழுப்பு சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள்,

9. பால் பொருட்கள்,

10. புகை பிடித்தல்,

11. கர்ப்ப காலம்,

12. சார்பு நிலை நோய்கள், உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டி, நாளமில்லா சுரப்பி நோய்கள்

வகைகள்:

1. பரு – 1.மூடிய முட்கரடு வெண் கொப்புளம், 2.திறந்த முட்கரடு,

2. சிறு கொப்புளங்கள்,

3. தோல் முடிச்சுகள்,

4. வடுக்கள்,

5. கரும்புள்ளிகள், கறைகள்,

சிகிச்சை முறைகள் :  இது உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆனால் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள் ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை உண்டு பண்ணக் கூடியது. இதனால் ஒருவரது தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. எந்தவொரு சிகிச்சையும் பலனளிக்க குறைந்த பட்சம் 2, 3 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் பருக்கள் மீண்டும் வராமலிருக்க தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பருக்களின் தன்மைக்கேற்ப தடவும் வகை மருந்துகள் : வாய்வழி உட்கொளளும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சிகிச்சையை தீவிரப்படுத்த ஒளி சிகிச்சை முறை போன்றவை கூடுதலாக தேவைப்படலாம்.
கரும்புள்ளி மற்றும் பருக்கள் தழும்புகள் போன்றவற்றை Micro dorma abratsin, Chamical Acaling, Laser போன்ற முறைகளில் சிகிச்சை தேவைப்படும்.

DOS / DONOS

1. சரியான வாழ்க்கை முறை,

2. மன அழுத்தம் சமன்பாடு,

3. அதிக நார்ச்சத்து கொண்ட உணவு உட்கொள்ளுதல்,

4. தலை பொடுகு சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல்,

5. அளவான உறக்கம்,

6. சரியான அளவு உடல் எடை,

7. உடற்பயிற்சி

Dosots :

பருக்களை கிள்ள கூடாது. தேவைக்கு அதிகமாக முகத்தில் கீரிம்  போடக்கூடாது.  அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது. தரமான சோப் கொண்டு இரண்டு முறை முகம் கழுவலாம். சிகிச்சை முறைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாற்றவோ, நிறுத்தவோ கூடாது.

தொகுப்பு – மருத்துவர் ஆர்.கனகராஜ்,
தோல் மருத்துவர், சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து