முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுரி லங்கேஷ் கொலையை கொண்டாடுவதா? தேசிய விருதுகளைத் திருப்பித் தர தயங்கமாட்டேன் - நடிகர் பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

பெங்களூர் :  மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதைக் கண்டித்து தமக்கு தரப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி தர தயங்கமாட்டேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களை சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதைக் கண்டித்து எனக்கு தரப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி தர தயங்கமாட்டேன். -   நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மௌனமாக இருப்பதன் மூலம், என்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பி அளிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கன்னட எழுத்தாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கர்நாடக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து