முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் 50லட்சத்து 50 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர் : கலெக்டர் க.லட்சுமி பிரியா தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      அரியலூர்
Image Unavailable

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா நேற்று (03.10.2017) வெளியிட, வருவாய் கோட்டாட்சியர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

 வாக்காளர் பட்டியல்

 இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :- அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149.அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதின் அடிப்படையில் 149.அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 124924 ஆண் வாக்காளர்களும், 125160 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் மொத்தம் 250089 வாக்காளர்கள்; உள்ளனர். 150.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 126412 ஆண் வாக்காளர்களும், 128557 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர்களும் மொத்தம் 254970 வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் 251336 ஆண் வாக்காளர்களும், 253717 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் ஆகமொத்தம் 505059 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று (03.10.2017) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து சிறப்பு சுருக்க திருத்த காலமான 01.01.2018 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலர்களால் பெறப்படும்.

 மேலும், 07.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய இரு தினங்கள் கிராம சபா அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும். 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றை கண்டறிந்து தெரிவிக்கலாம். எனவே, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் 03.10.2017 முதல் 31.10.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் க.லட்சுமிபிரியா, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் மோகனராஜன் (அரியலூர்), டினாகுமாரி (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் ரவி (தேர்தல் பிரிவு) முத்துலெட்சுமி (அரியலூர்), திருமாறன் (ஜெயங்கொண்டம்), வேல்முருகன் (ஆண்டிமடம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து