முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன், அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் இடையன்சாத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் ஏடீஸ் கொசு ஒழிப்பு தினத்தை கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்து பேசியதாவது:-

கலெக்டர் அறிவுறுத்தல்

டெங்க காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் வாரத்தின் வியாழக்கிழமைகளில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தநிகழ்ச்சி நடைபெறுகிறது. டெங்கு காய்ச்சல் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. டெங்கு ஏடீஸ் கொசு நல்ல நீரில்தான் உருவாகிறது. இந்த கொசுவின் வாழ்நாள் ஒரு மாதமாகும். பகலில் மட்டும் கடிக்கும் இந்த கொசுவினால் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. இவற்றை கட்டுப்படுத்த நாம் நம்முடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும். நம்முடைய வீடுகளை நாம் வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்வதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். நமது மாவட்ட நிர்வாகம் மூலமாக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சுமார் 1350 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்து வீடுகளில் உள்ள தொட்டிகள், காலி இடங்கள், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்து கொசு புழுக்களை அழிப்பார்கள். இவ்வாhறு களப்பணியாற்றினாலும் டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே வருகிறது. இதற்கு காரணம் மக்களிடையே இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இவற்றை கட்டுப்படுத்தவே மாணவர்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நீங்கள் இங்கு பார்க்கும் கருத்துக்களை தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புரத்திலும் உள்ள உறவினர்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று மாணவர்களிடையே கலெக்டர் பேசினார்.

பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் டெங்கு கொசு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் மூலம் நடித்து காண்பித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நில வேம்பு கசாயத்தை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அடுக்கம்பாறை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.லலிதா, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, துணை இயக்குநர் (பொதுசுகாதாரம்) மரு.சுரேஷ், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.திருமால்பாபு, குழந்தை நல துறை பேராசிரியர் மரு.தேரணிராஜன், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து