முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் : கலெக்டர் வே.சாந்தா, தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      பெரம்பலூர்
Image Unavailable

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா தலைமையில் கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கண்காணிப்பு கூட்டம்

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: எடைக் குறைவான குழந்தைகளுக்கு மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவேண்டும். கடுமையான எடை குறைவு குழந்தைகளுக்கு மாற்று உணவு வகைகள், இணை உணவுடன் தானியங்கள், பயறு வகைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கென தனியாக உணவு அட்டை பராமரிக்க வேண்டும். மேலும் தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுது வழங்கப்படும் அரசின் ஊக்கத் தொகை உரிய நேரங்களில் வழங்குவதால் கர்ப்பகாலத்திலேயே நல்ல உணவு பெற முடியும். மேலும் மக்கள் தொகையை குறுக்காய்வு செய்யும் பொழுது வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்களை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிற வட்டாரங்களில் இந்த எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்யவேண்டும். சரியான எடையுள்ள குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு, தாய் நல்ல ஊட்டச்சத்து நிலையிலும் சரியான திருமண வயதிலும் இருக்க வேண்டும். இளம் வயது திருமணம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெண் சிசுக்கொலை நடைபெறுவதைத் தடுக்க வேண்டும்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு தகவல் தொடர்பு கல்வி அளித்து மனநிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த தகவல் தொடர்புக் கல்வியை பள்ளிக் குழந்தைகள் அளவில் இருந்தே தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இது குறித்து சுவர் விளம்பரங்களை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலும் ஒட்டப்பட வேண்டும். மேலும், அங்கன்வாடி மையங்களில் கர்ப்பங்கள் பதிவிடப்படவேண்டும். மையங்கள் நல்ல கட்டிட வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதியுடன் செயல்படவேண்டும். மையங்களில் கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்படவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) உமாமகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திட்ட அலுவலர் ச.பூங்கொடி, பொது சுகாதாரம் துணை இயக்குநர் மரு..சம்பத், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்ஃதணிக்கை) பாலன், முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து