முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 8-ம் தேதி இந்தியா வருகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

புதுடெல்லி - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வரும் 8-ம் தேதி இந்தியா வர இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் இந்தியா வந்த சார்லஸ் நான்கு நாட்கள் கேரளாவில் உள்ள அருங்காட்சியகங்களையும்  சுற்றுலா தளங்களையும் பார்வையிட்டார். மேலும் அப்போது கேரள பாரம்பரியங்களையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

அரசு முறை பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது காதல் மனைவி கமிலா பார்க்கர் ஆகியோர் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் சிங்கப்பூர், மலேசியா ,புருனே ஆகிய நாடுகளிலும் அவர்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

8-ம் தேதி இந்தியா வரும் அவர்கள் இங்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இந்த பயணத்தின் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்திகிறார்கள்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இருநாட்டின் உறவுகள் குறித்தும் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் தலைவர்கள்  கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை இளவரசர் அழைப்பார் என்றும் தெரிகிறது.

தற்போது நிலவும் காலநிலை மாற்றம், ஜி.டி.பி. வளர்ச்சி ஆகியவை குறித்தும்  இருவரும் பேச இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து