முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓகி புயல் சீற்றம்: குஜராத்தில் முக்கிய தலைவர்களின் பிரச்சார கூட்டங்கள் ரத்து

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : குஜராத் மாநில சட்டசபை முதல் கட்ட தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த முக்கிய அரசியல் தலைவர்களின் பிரச்சார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மாநில சட்டசபை முதல் கட்டத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது. முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நிலையில் ஓகி புயல் சீற்றம் காரணமாக குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சூரத் மண்டலத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்தது. ஆனால் குஜராத் அருகே கடலில் மையம் கொண்டிருந்த அந்த புயல் கரையை கடக்காமல் ஒரே இடத்தில் மையம் கொண்டிருந்தபடி வலு இழந்தது. அடுத்த 2 நாட்களுக்குள் ஓகி புயல் மேலும் வலுவிழந்து குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விடும் என்று தெரியவந்துள்ளது. இதனால் குஜராத்தில் வரும் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை மற்றும் சூறாவளி காரணமாக குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புஜ்நகரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ராகுல், அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான  வானிலை காரணமாக அவர் தனது பிரச்சார திட்டத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார். நேற்று ராகுலின் சூரத், தபி, நர்மதா, டங்ஸ் நகர கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே போல் பிரதமர் மோடி நேற்று சூரத் நகரில் பேசுவதாக இருந்தது. பலத்த மழை காரணமாக அவரது கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. பா.ஜ.க தேசிய தலைவர் அமீத்ஷாவின் பிரச்சார கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து