முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 8 ஆயிரம் கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவரித்தனை: லல்லு மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி :  ரூ. 8 ஆயிரம் கோடிக்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக லல்லு மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

90 போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக கூறி டெல்லியை சேர்ந்த சுரேந்திரகுமார் ஜெயின், விரேந்திர ஜெயின் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இந்த போலி நிறுவனங்களில் ஒன்றான மிசைல் பிரிண்டர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக லல்லுவின் மகளும், எம்.பியுமான மிசா பார்தி, அவரது கணவர் சைலேஷ்குமார் ஆகியோர் செயல்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சைலேஷ்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான சைலேஷ்குமாரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக மிசா பார்தியிடம், சைலேஷ்குமாரிடமும் ஏற்கனவே அமாக்கத்துறை விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.

இந்த விசாரணையின் போது சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். அதோடு மிசா பார்தி அளித்த வாக்குமூலத்தையும் அவர் மறுத்து இருந்தார். ஆகவே தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து