முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், மூன்று சக்கர வண்டி மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் என மொத்தம் 295 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினார்.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 30 நபர்களுக்கு தலா ரூ.1500- வீதம் ரூ.45,000- பெறுவதற்கான ஆணையினையும், விஜயகுமார் என்கிற முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபருக்கு சிறப்பு சக்கர நாற்காலி ரூ.20,000-மதிப்பிலும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கர், உதவி ஆணையர் (கலால்) மல்லிகா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் அமீர்பாஷா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து