முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு: தரமான உணவு விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (16.12.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் உத்தரவு

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, சேந்தமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, இராசிபுரம், அண்ணாசாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு விடுதிகளை விடுதிகளில் சமையலரை, பொருட்கள் இருப்பு அறை, மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகள், மாணவ, மாணவியர்கள் தங்கியுள்ள அறைகள் உள்ளிட்டவற்றை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கு தங்கியுள்ள மாணவ, மாணவியர்களிடம் விடுதியில் நாள்தோறும் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டறிந்ததோடு, உணவு தரமாகவும், சுவையாகவும் இருக்கின்றதா எனவும் அரசு அறிவித்துள்ள பட்டியலின்படி தங்களுக்கு முட்டை, மட்டன், சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளும், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர் உள்ளிட்டவைகளுடன் சாப்பாடு வழங்கப்படுகி;றதா எனவும், காலை, மாலையில் இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளும் முறையாக வழங்கப்படுகின்றனவா எனவும் கேட்டறிந்தார். அதற்கு மாணவ, மாணவியர்கள் பட்டியலில் குறிப்பிட்டுள்ள எல்லா உணவு வகைகளும் நாள்தோறும் கிடைக்கின்றது எனவும், முதல் மற்றும் மூன்றாவது வார புதன்கிழமைகளில் சிக்கனும், இரண்டாவது மற்றும் நான்காவது வார புதன்கிழமைகளில் மட்டனும் கொடுக்கின்றார்கள் எனவும் மாதத்திற்கு 20 முட்டைகளும் வழங்குகின்றார்கள் எனவும் தெரிவித்ததோடு அனைவரும் சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகள் சிறப்பாக இருக்கின்றது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கலெக்டர் மு.ஆசியா மரியம் விடுதி மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவுகளை பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு நாள்தோறும் தவறாமல் வழங்கிட வேண்டுமென விடுதி காப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன் உட்பட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி காப்பாளர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து