முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கம், பேரிடர் நேரங்களில் பொதுமக்களை எவ்வாறு துரிதமாக காப்பாற்றுவது, பயிற்சி பள்ளி காவலர்களுக்கு செயல்விளக்க முகாம்: கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புபணிக் குழுவினர் இணைந்து மழை, வெள்ளம், புயல் மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்ற எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பது குறித்து காவலர் பயிற்சி பள்ளி காவலர்களுக்கு செயல்முறை விளக்க நிகழ்ச்சி கலெக்டர் சி.அ.ராமன், தலைமையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், முன்னிலையிலும் நடைபெற்றது.

செயல் விளக்கம்

 

இந்நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்து பேசியதாவது:- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளையே பேரிடர் என்று கூறுகிறோம். அதாவது மழை, வெள்ளம், புயல், பூகம்பம், சுனாமி மற்றும் வறட்சி இவையே இயற்கை இடர்பாடுகளாகும். இந்த இயற்கை இடர்பாடுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காலகட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவே பேரிடர் மேலாண்மைத் துறை அமைக்கப்பட்டு அத்துறையின் மூலம் இயற்கை இடர்பாடுகளினால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மக்களை பாதிப்புகளிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப துரித நடவடிக்கைகளை எடுப்பதுமே பேரிடர் மேலாண்மைத் துறையின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழு (Nனுசுகு) செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு (Nனுசுகு) செயல்பட்டு வருகிறது.

மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து காவலர்களும் பணியாற்றிட வேண்டும். இதற்காகவே இங்கே உள்ள 500 பயிற்சி காவலர்களுக்கு செயல்விளக்க பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் பல்வேறு வகையான இயற்கை இடர்பாடுகளின் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பேரிடர் மேலாண்மை அரசு அலுவலர்கள், தன்னார்வ பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலிருந்து உடனடியாக தகவல்களைப் பெற்று செயல்பட முடியும். இந்த பணிகளில் முக்கியமாக மின்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி துறை அலுவலர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், வேலூர் கோட்டாட்சியர் செல்வராஜ், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) பூமா, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆரோக்கியம், பழனிவேல், காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் பவன்சிங் சேவியர் பெஸ்கி, முதன்மை காவத் போதகர் அசோகன், ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன், அரசு அலுவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து