முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயிலுக்குள் ரொம்ப குளிரடிக்குது: நீதிபதியிடம் லல்லு காமெடி உரையாடல்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி, கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவுக்கு நேற்று முன்தினம் தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதற்காக அவர் ஜெயிலில் இருந்து ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது லல்லுவை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் கடுமையான கோஷம் எழுப்பினார்கள். இதனால் கோர்ட் வளாகம் பரபரப்பாக மாறியது. இதனால் தீர்ப்பு வழங்குவதை நீதிபதி சிவபால்சிங் ஒத்தி வைத்தார். அந்த நெருக்கடியான சூழ்நிலையில் நீதிபதிக்கும் லல்லுவுக்கும் இடையே நடந்த காமெடி உரையாடலை இங்கே பார்ப்போம்.

லல்லு: யுவர் ஆனர், ஜெயிலுக்குள் ரொம்பவும் குளிருது. தாங்க முடியலை. எனவே கொஞ்சம் கூலா.. இருந்து என் தலைவிதியை நிர்ணயம் செய்யுங்கள்.

நீதிபதி: குளிருதா, நீங்கள்தான் மேளம் அடிப்பீங்களே. மேளம் அடியுங்கள். சூடாக இருக்கலாம். உங்க ஆதரவாளர்கள் கோர்ட் தீர்ப்பு பற்றி சாதி ரீதியாக வெளிப்படையாக பேசுகிறார்கள்.

லல்லு: சார், இப்போது கலப்பு திருமணம் அதிகரித்து விட்டது அல்லவா, அதனால்தான் பேசி இருப்பார்கள்.

நீதிபதி: அப்படியா, சரி, தீர்ப்பை நாளைக்கு(இன்றைக்கு) சொல்லட்டுமா. இதில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே.

லல்லு: இல்லை. சார். ஆனால் தீர்ப்பை என்கிட்ட சொல்லுங்க. வீடியோ கான்பரன்சிங் வேண்டாம்.

நீதிபதி: கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு யாருக்கும் தெரியாமல் சம்மன் அனுப்புகிறேன் போதுமா.
லல்லு: இது போதும்.

நீதிபதி: ஆனால் உங்கள் ஆதரவாளர்கள் என்னிடம் அடிக்கடி போனில் பேசுகிறார்கள். உங்களுக்காக பரிந்து பேசுகிறார்கள் என்றாலும் நான் சட்டத்தைத்தான் கடைப்பிடிப்பேன்.

இவ்வாறு நீதிபதி கூறியதும் லல்லு எந்த பதிலும் சொல்லவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து