அன்றே சொன்னேன்; இன்று நிஜமானது: கீர்த்தி சுரேஷ் உற்சாகம்

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      சினிமா
Kirti Suresh

Source: provided

நான் ஸ்கூல் படிக்கும் போது சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமானதில் எனக்கு மகிழ்ச்சி என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் உருவாகி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், '''தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நான் பிராமணப் பெண் வேடத்தில் நடிக்கிறேன்.

படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹியூமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன்.பள்ளிப் பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை.


என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படங்களில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன்.

அது இன்று நிஜமானதில் எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லிக்கொடுத்து உதவுவார்'' என்றார் கீர்த்தி சுரேஷ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து