முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்தின் ஓவ்வொரு துறையும் நவீனமயமாக்கப்பட வேண்டும் - தலைமை தளபதி பிபின் ராவத் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ராணுவத்தின் ஓவ்வொரு துறையும் வீனமயமாக்கப்பட வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கில் உரையாற்றிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது:-

கடினமான சூழ்நிலை

எதிர்கால போர்கள் மிகவும் கடினமாக சூழ்நிலையில் போராட வேண்டிய முறைகளில் உள்ளதால் நாம் நமது சேவை மற்றும் ஆயுதங்களை நவீனபடுத்த வேண்டும். நம் ஆயுதப் படைகள் ஒவ்வொரு துறையிலும் நவீனமயமாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. எதிர்கால போர்கள் கடினமான சூழ்நிலையில் நடைபெறும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆதரவு கிடைக்கும்

அரசாங்கமானது ஆயுதப் படைகளுக்கு தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு நல்ல முன்னேற்றமடைந்தது லேசான எடை புல்லட் புரூப் பொருள் மற்றும் எரிபொருள் செல் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தம் பணி தொடங்கி உள்ளது.  எங்களுக்கு இதற்கான் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம். பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இறக்குமதியை இந்தியா குறைக்க  வேண்டும்.  உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த போராட வேண்டும். 

உறுதி செய்வோம் ...

"நாங்கள் படிப்படியாக இறக்குமதியிலிருந்து (பாதுகாப்பு தொழில்நுட்பத்தில்) விலகி செல்ல விரும்புகிறோம், ஏனெனில் நம்  நாட்டை நேசிக்கிறோம். போரில் நாம் உள்நாட்டு  பாதுகப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து