முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் விவரங்களை பார்ப்பதற்கு 5000 அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு யு.ஐ.டி.ஏ.ஐ அதிரடி நடவடிக்கை

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஆதார் எண்கள் மூலமாக விவரங்களை காண்பதற்கு சுமார் 5000 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வசதியை யுஐடிஏஐ வாபஸ்பெற்றது.

நாட்டில் உள்ள குடிமக்களுக்கு பிரத்யேக அடையாள எண்களை வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தனி நபர்களின் கைரேகை, கரு விழிப்படலம் உள்ளிட்டவை பெறப்பட்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) நேரடி மேற்பார்வையின் கீழ் இந்தப் பணிகளை அரசு மற்றும் தனியார் துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.

இந்தச் சூழலில், ஆதார் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் தனி நபர்களின் விவரங்களை வெறும் ரூ.500 வழங்கி தெரிந்து கொள்ள முடிகிறது என்ற அதிர்ச்சித் தகவலை “தி டிரிப்யூன்” பத்திரிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

இதையடுத்து யுஏடிஏஐ சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் போலீஸாருக்கு உதவ டிரிப்யூன் பத்திரிகை நிர்வாகத்தையும் யுஐடிஏஐ கேட்டுக் கொண்டது. இந்நிலையில், ஆதார் எண்கள் மூலமாக அதுதொடர்பான விவரங்களை காண்பதற்கு சுமார் 5000 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வசதியை யுஐடிஏஐ வாபஸ்பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து