முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்கொடி தூக்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 பேர் தங்கள் பணிகளை துவங்கினர்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நான்கு நீதிபதிகளும் நேற்று தங்கள் வழக்கமான அலுவல் பணிகளை துவங்கினர்.

நீதிபதிகளுக்கு இடையேயான சச்சரவு வெளிப்படையாக அவர்களுக்குள்  பேசி தீர்த்துக் கொள்ளப்பட்டதாக தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இது பற்றி உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை. தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நான்கு நீதிபதிகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தற்போது வரை சந்தித்து பேசவில்லை. 

இதற்கிடையே,  நேற்று சுப்ரீம் கோர்ட்டில்  ஆர்.பி லுத்ரா என்ற வழக்கறிஞர் தலைமை நீதிபதி முன்பு, நீதிபதிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சினையை எழுப்பினார். சுப்ரீம் கோர்ட்டின் மாண்பை குலைக்க சதி நடப்பதாகவும் தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டார். இதை கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி மிஸ்ரா, பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் காத்தார்.

நீதிபதிகள் போர்க்கொடி  ஏன்?

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். டெல்லியில் கடந்த ஜன.12 ம் தேதி நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும், நிர்வாகம் மீதும் குற்றம் சாட்டினர்.

இந்த மோதல், இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது என்ற கருத்தும் எழுந்து உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள நீதிபதிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் இந்திய பார் கவுன்சில் இறங்கியது.
இது தொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை பார் கவுன்சில் அமைத்து உள்ளது.  இந்த குழுவினர் அதிருப்தி வெளிப்படுத்திய நீதிபதிகளை சந்தித்து பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து