முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-வது டெஸ்ட்டில் வீராட் கோலி தனது 21-வது சதத்தை அடித்தார்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். டீன் எல்கர் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய மார்கிராம் 94 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்ஸ் 20 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில் ஸ்டெம்புகள் சிதற அவுட் ஆனார். அதன்பின் கேப்டன் டு பிளிசிஸ், அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். அரைசதம் கடந்த அம்லா, 82 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேஷவ் மகராஜ் அவுட்டானார்.  அரை சதமடித்த டு பிளசிஸ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்ஆப்ரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி பந்துவீச்சில் அஷ்வின் 4 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 28 ஆக இருக்கும் போது லோகேஷ் ராகுல் 10 ரன்களில் மார்கல் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த புஜாரா எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் கோலி - முரளி விஜய் ஜோடி பொறுப்பாக ஆடியது. அணி எண்ணிக்கை 107 ஆக இருக்கும்போது 46 ரன்களில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 10 ரன்களிலும், விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல் 19 ரன்களில் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை 164 ஆக இருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கோலி அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்களுடனும், பாண்ட்யா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தென் ஆப்ரிக்காவை விட 152 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

3 வது நாளான இன்று வீராட் கோலி சதம் அடித்தார். இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இருந்தது. வீராட் கோலி 103 ர்ன்களுடனும், பாண்ட்யா-15 ரன்களுடனும் நிதான்மாக விளையாடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து