முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ துறையில் தமிழகம் முதன்மை மாநிலம் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கியதன் காரணமாக இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவ துறையில் முதன்மை மாநிலமாக திகழ்வதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டி உள்ளார்.

தமிழகத்தில் 1000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கல்லீரலை தானமாக வழங்கியவர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

கடந்த காலங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னுடைய நண்பர் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டு லண்டனில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் தற்போது அமெரிக்கா, அரபுநாடுகள், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்துள்ளார். அந்தவகையில் தான் இந்தியாவிலேயே மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் செல்வது பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் உரியது. உடல் உறுப்பு மாற்று அறுவையை சிகிச்சையை மருத்துவமனைகள் செய்து வந்தாலும் கூட, தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து