முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு வேறு சாலை விபத்துக்களில் உயிரிழந்த 11பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அச்சிறுப்பாக்கம், திருப்பூர் தாராபுரம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து நபர்கள்...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் சரகம், ஆத்தூர்கிராமம் அருகே, சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து சிற்றுந்தின் மீது மோதியதில், சிற்றுந்தில் பயணம்செய்த, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டம், செம்பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த. கருப்பையா என்பவரின் மனைவி பிரபாவதி, செல்வராஜ் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி, மோகன் என்பவரின் மனைவி ராதிகா, முருகையா என்பவரின் மகன் தினேஷ் மற்றும் சின்னராஜா என்பவரின் மகன் இளம்பிரிதி ஆகிய ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

ஆறு நபர்கள்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமம், கிழுவங்காட்டுத் தோட்டம் அருகில், திருப்பூர்-தாராபுரம் நெடுஞ்சாலையில் திருப்பூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, பழனிக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியதில், திருப்பூர் மாவட்டம், முருங்கப்பாளையத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவரின் மனைவி மகேஸ்வரி, குமார் நகரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் நடராஜ், ஜெயபிரகாஷ் என்பவரின் மனைவி சாந்தி, செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி விஜயா, அவிநாசியைச் சேர்ந்த அவிநாசியப்பன் என்பவரின் மனைவி ராஜாமணி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் காளிமுத்து ஆகிய ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தலா ரூ.1 லட்சம்...

இந்த சாலை விபத்துக்களில் அகால மரணமடைந்த 11 நபர்களின்குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கஉத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து