முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் ஹஜ் மானிய ரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-புனித ஹஜ் பயணம் செல்வதற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியத்தை திடீரென்று ரத்து செய்ததை கண்டித்து  தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். இதில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணகாந்தி, ராஜசேகர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் பாரிராஜன், சிறுபாண்மை பிரிவு நிஜாம்அலிகான், துல்கீப், ஹாஜா, நகர் தலைவர்கள் கோபி, முன்னால் மாவட்ட தலைவர் விக்டர், சிறப்பு அழைப்பாளர்கள் முத்துராமலிங்கம், ரமேஷ்பாபு, மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு அன்புச்செழியன், இலக்கிய அணி  தலைவர் முருகேசன், செய்தி தொடர்பாளர் கௌசிமகாலிங்கம், மகளிர் அணி மாவட்;;;ட தலைவர் சகுந்தலாதேவி, மாவட்ட பொது செயலாளர் பெமீலா விஜயகுமார், அப்துல் அஜீஸ், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரி,  வட்டார தலைவர்கள் ஜெயபாண்டி, சேதுபாண்டி, கோபால் முருகன், ஜேசுமனோகரன், கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் முன்னால் தலைவர் மணிகண்டன், மீனவரணி தலைவர் சகாயராஜ், கலைப்பிரிவு வலம்புரி முனியசாமி, ரவி உட்பட திரலான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசைக்கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து