முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நிதியம் சார்பில் உலக அளவில் பொருளாதார சூழல் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘‘இந்தியாவில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2017ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்தது. இதனால் 2017ல் பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும். 2019ம் ஆண்டில் இது 7.8 சதவீதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து