முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலக கோப்பை: முதல் முறையாக அரையிறுதியில் நுழைந்து ஆப்கான் அணி சாதனை

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன் : ஜூனியர் உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக அரையிறுதிப் போட்டியில் நுழைந்து ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்துவருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த போட்டியில் ’கத்துக்குட்டி’ ஆப்கானிஸ்தான் அணியும் வலுவான நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ரஹ்மத்துல்லா குர்பாஸ் 69 ரன்களும் இப்ராஹிம் ஸத்ரன் 68 ரன்களும் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

நியூசி. தோல்வி...

பின்னர் வந்த பஹிர் ஷா, அஸ்மத்துல்லா ஆகியோர் முறையே 67, 66 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதில் அஸ்மத்துல்லா, 23 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுணட்ரியுடன் 66 ரன்களை குவித்து அதிர்ச்சி கொடுத்தார். அந்த அணி, 50 ஓவர் முடிவில் 309 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆப்கான். அவர்களின் நேர்த்தியான பந்துவீச்சில், 28.1 ஓவரில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நியூசிலாந்து தோல்வியை தழுவியது. இதையடுத்து 202 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வென்றது. ஆப்கான் தரப்பில், முஜிப், அகமது தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அரையிறுதிக்கு...

இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து