முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகனஸ்பர்க் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும், புவனேஸ்வர் குமார் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், மோர்கல், பிலாண்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆம்லா 61, பிலாண்டர் 35, நிகிடி 30 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

2-வது இன்னிங்ஸ்

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முரளி விஜய் 25, விராட் கோலி 41, ரஹானே 48, புவனேஸ்வர் குமார் 33, முகமது ஷமி 27 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், மோர்கல், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பவுளர்கள் அபாரம்

241 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எல்கர், ஆம்லா ஜோடி சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தது. ஒரு கட்டத்தில் இந்த டெஸ்டிலும் தோற்று வயிட்-வாஷ் ஆகும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இருப்பினும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் சவால் அளித்தனர். குறிப்பாக முகமது ஷமியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. இஷாந்த் பந்துவீச்சில் ஆம்லா 52 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

முகமது ஷமி அபாரம்

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் என்ற நிலையில் இருந்து 177 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. துவக்க வீரர் எல்கர், 240 பந்துகளில் 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசி வரை போராடினார். இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.  இதனால் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து